Saturday, 17 August 2013
Thursday, 15 August 2013
Sunday, 11 August 2013
Saturday, 10 August 2013
Wednesday, 7 August 2013
சிகரம் எட்ட சில சிந்தனைகள்…
* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!
* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!
* அபாய நிலைகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம் நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!
* இணக்கமற்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றியை ஈட்டுவதற்காக இடைவிடாது போராடுவதும் ஓய்வின்றிப் போரிடுவதுமே மிகப்பெரிய சாதனைகளுக்கு நீங்கள் கொடுக்கிற விலை.
* உங்கள் குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள். அந்நிலையில் அது காணத்தக்கதாயும், உணரத்தக்கதாயும் இருக்கும்! அதன்பிறகு அது வெறும் எண்ணாயிருக்காது… ஏற்கப்பட்ட பொறுப்பாகி விடும்!
* தகுதியான ஒன்றைச் செய்வதற்கு தகுதியான சூழ்நிலை வரட்டும் என்று காத்திருக்காதீர்கள். சாதாரண சூழ்நிலைகளையே தகுதியானதாக்கிக் கொள்ளுங்கள்.
* மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது. உழையுங்கள்- தொடர்ந்து உழையுங்கள்… கடினமாய் உழையுங்கள்… அதுவே, நிலையான பலன்களைத் தரும்!
* வாழ்க்கை, முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது. நம் அச்சங்களைக் கடப்பதன் மூலம், நாம் கற்றுணர முடியுமாயின், நம்முடைய இயற்கைத் தன்மையை நம்மால் வெளிப்படுத்த இயலுமாயின் வாய்ப்புகள் முடிவற்றவை!
* பயன்படுத்தப்படாத துணிவு தன்னால் குறைந்து விடும். பயன்படுத்தப்படாத பொறுப்புணர்வும் படிப்படியாய் மங்கி விடும். பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகிப் போய் விடும்!
* நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள், அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள், எச்சரிக்கை – மூத்த சகோதரனாய் இருக்கட்டும். நம்பிக்கை – அறிவு மிக்க பாதுகாவலராய் இருக்கட்டும்!
* நிலையான வெற்றியைப் பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும், செயல்முறையிலும் – நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!
* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்று விடுவதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களை வலிமையுடையவராக்கும்.
வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே… அதுதான் வலிமை.
வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே… அதுதான் வலிமை.
* யார், வாக்கு தவறாதவனோ, நேர்மையாய் சிந்திக்கிறவனோ, வெளிப்படையாய் பேசுகிறவனோ, மக்கள் அவனையே மதிக்கின்றனர். அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்!
* வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை, ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள்
அது – அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!
* சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழி!
* செடிகள் பூப்பதற்குத் தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்! நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!
* அறிவாற்றலின் பயன் அரிதாகவே இனங் காணப்படுகிறது. அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!
வெற்றி பெற….
இலட்சியத்தில் வெற்றி பெறுவோம் என்ற உறுதி மட்டும் இருந்தால் போதும் உங்கள் பணிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து உழையுங்கள்.
கதவைத் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளின் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
.
நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள்
.
எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள். செயலோடும் தொடங்குங்கள்
.
எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்
.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் “இப்பொழுது”. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் “பிறகு”. வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்
.
நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங்கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார்கள்
.
எதையும் ஒரு திட்டத்தோடு மட்டும் தொடங்காதிர்கள். செயலோடும் தொடங்குங்கள்
.
எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவர்கள் தங்களுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்
.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் “இப்பொழுது”. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் “பிறகு”. வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே எதையும் தள்ளிப் போடாதிர்கள்
‘டெபாசிட்’

ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, “தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது உனக்கு, மிஞ்சியது எனக்கு” என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தினமும் அதில் ஒரு ரூபாயையாவது நீங்கள் மிஞ்ச விடுவீர்களா? முழுப்பணத்தையும் எப்படிச் செலவழிப்பது என்று திட்டமிட்டுச் செலவு செய்ய மாட்டீர்களா?
உண்மையிலேயே அப்படி ஒரு தேவதை அப்படி ஒரு வரத்தை உங்களுக்கு அளித்துள்ளது. அது தான் கால தேவதை. அது பணத்தை விட விலை மதிப்புள்ள 86400 வினாடிகளை உங்களுக்கு ஒரு நாளில் செலவழிக்கத் தருகிறது. அதில் நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?
ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டால் கால விரயத்தை முழுவதும் தடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கென்று செய்யத் திட்டமிட்ட வேலை இருந்தால் வீண்பேச்சு, வேடிக்கை பார்த்தல், அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்தல் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம்.
இவை யாவும் இலக்கில்லாத வாழ்க்கையின் இயற்கையான குணாதிசயங்கள். திட்டமிட்டுச் செயல்படும் போது தெளிவாக இருக்கிறோம். அனாவசியங்களைத் தவிர்க்கிறோம். அதன் மூலம் காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கிறோம்.
ஒவ்வொரு நாள் இரவும் உங்களது அன்றைய செயல்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். காலதேவதையின் ‘டெபாசிட்’ எப்படியெல்லாம் செலவாகி இருக்கிறது என்று கணக்கிடுங்கள். எப்படிச் செயல்பட்டிருந்தால் காலம் இன்னும் சிறப்பாகப் பயன்பட்டிருக்கும் என்று சிந்தியுங்கள். மறுநாள் அது போலவே இன்னும் சிறப்பாகவே காலத்தைப் பயன்படுத்திச் செயல்படுவேன் என்று மனதில் உறுதி பூணுங்கள்.
எல்லாவற்றைற்கும் மேலாக ஒரு செயலைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனத்தையும் அதில் வையுங்கள். இதனால் அச்செயலை விரைவாகவும் சிறப்பாகவும் செய்யும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.
காலதேவதை கருணை உள்லது. ஒரு நாள் அந்த ‘டெபாசிட்’டை நீங்கள் வீணாக்கினீர்கள் என்பதற்காக மறுநாள் உங்களுக்கு அதைத் தராமல் இருப்பதில்லை. பெருந்தன்மையுடன் உங்களுக்குத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பத்துக் கட்டளைகள்.
1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.
எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப்
பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.
3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.
இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.
4. உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.
5. தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.
புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.
6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
7. ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.
உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.
8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.
நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
9. சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.
சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.
10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.
பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.
1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன தெரியுமா ? என்ற கேள்விக்கு இதோ பதில் 1961ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியன்று, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.94 ஆனவுடன் தினத்தந்தி வெளியிட்ட தலைப்புச்செய்தி இது. இதோ அந்த தலைப் புச் செய்தியை கீழே பிரசுர்ரித்துள்ளேன். பாருங்கள்

அடேங்கப்பா! இந்தியாவில் எது முன்னேறியிருக்கிறதோ இல்லை யோ இந்த தங்கத்தின் விலை அபரிமிதமாக எட்டாத உயரத்திற்கு தற்போது உயர்ந்துள்ளதை பார்க்கும்போது, பாமரரும் படித்தவரும் மூக்கின் மேல் விரல் வைத்து, நகை கடைக்குள் ஒரு முறை உள்ளே சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிவிட்டு திரும்புவதுதான் நம்மால் முடிந்தது.
இணையதள முகவரிகள்
இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/
01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll
02. தகவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
03. இந்திய அரசின் இணையதள முகவரி
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைஇணைய தள முகவரி
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
Subscribe to:
Posts (Atom)