Wednesday 7 August 2013

சிகரம் எட்ட சில சிந்தனைகள்…

* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!
* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!
* அபாய நிலைகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம் நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!
* இணக்கமற்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றியை ஈட்டுவதற்காக இடைவிடாது போராடுவதும் ஓய்வின்றிப் போரிடுவதுமே மிகப்பெரிய சாதனைகளுக்கு நீங்கள் கொடுக்கிற விலை.
* உங்கள் குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள். அந்நிலையில் அது காணத்தக்கதாயும், உணரத்தக்கதாயும் இருக்கும்! அதன்பிறகு அது வெறும் எண்ணாயிருக்காது… ஏற்கப்பட்ட பொறுப்பாகி விடும்!
* தகுதியான ஒன்றைச் செய்வதற்கு தகுதியான சூழ்நிலை வரட்டும் என்று காத்திருக்காதீர்கள். சாதாரண சூழ்நிலைகளையே தகுதியானதாக்கிக் கொள்ளுங்கள்.
* மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது. உழையுங்கள்- தொடர்ந்து உழையுங்கள்… கடினமாய் உழையுங்கள்… அதுவே, நிலையான பலன்களைத் தரும்!
* வாழ்க்கை, முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது. நம் அச்சங்களைக் கடப்பதன் மூலம், நாம் கற்றுணர முடியுமாயின், நம்முடைய இயற்கைத் தன்மையை நம்மால் வெளிப்படுத்த இயலுமாயின் வாய்ப்புகள் முடிவற்றவை!
* பயன்படுத்தப்படாத துணிவு தன்னால் குறைந்து விடும். பயன்படுத்தப்படாத பொறுப்புணர்வும் படிப்படியாய் மங்கி விடும். பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகிப் போய் விடும்!
* நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள், அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள், எச்சரிக்கை – மூத்த சகோதரனாய் இருக்கட்டும். நம்பிக்கை – அறிவு மிக்க பாதுகாவலராய் இருக்கட்டும்!
* நிலையான வெற்றியைப் பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும், செயல்முறையிலும் – நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!
* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்று விடுவதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களை வலிமையுடையவராக்கும்.
வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே… அதுதான் வலிமை.
* யார், வாக்கு தவறாதவனோ, நேர்மையாய் சிந்திக்கிறவனோ, வெளிப்படையாய் பேசுகிறவனோ, மக்கள் அவனையே மதிக்கின்றனர். அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்!
* வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை, ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள்
அது – அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!
* சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழி!
* செடிகள் பூப்பதற்குத் தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்! நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!
* அறிவாற்றலின் பயன் அரிதாகவே இனங் காணப்படுகிறது. அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.