Tuesday 5 January 2016

காப்பீடு விற்கனுமா? வாங்க வைக்கனுமா?

காப்பீடு விற்கனுமா?
வாங்க வைக்கனுமா?
--------------------------------------
இருக்கும் பொருளை காண்பித்து விற்பது மற்ற விற்பனை

இல்லாத பொருளின்
பொருளை புரிய வைத்து விற்பது
காப்பீட்டு விற்பனை.

அது கண்ணை கவருவது.
இது மனதை
கவருவது.

அது பிடித்து வாங்குவது
இது படித்து வாங்குவது.

அது விருப்பம்
இது தேவை.

அது நாளாக மதிப்பு குறையும்
இது நாளாக மதிப்பு
கூடும்.

அது நமக்காக!
இது நம்மவர்க்காக!

அது ஆசையால் வாங்குவது.
இது அன்பினால்
வாங்குவது.

அது உடனே அனுபவிக்க.
இது உடனுள்ளவர்
அனுபவிக்க.

சேமிப்பை கரைப்பது
அது.
சேமிப்பை உரைப்பது
இது.

அதை ஓடிப்போய்
வாங்குவார்.
இதை தேடிப்போய்
விற்கனும்.

அது செலவு
இது முதலீடு

அது பொருள் சேர்ப்பது
இது சொத்து சேர்ப்பது.

அது உணரச்சியில்
இது உணர்வில்.

இதை விற்க முயன்றால்
குறைவாக விற்கும்.
இதை வாங்கவைத்தால்
கூடுதலாக விற்கும்.

இதில் வேண்டியது
பொறுமை.
அதில்தான்
பெருமை.

இல்லத்தில்
உள்ளதெல்லாம்
வெள்ளத்தில்
போனாலும்
உள்ளத்தில் ஊக்கம்
தருவது காப்பீடு
மட்டுமே!

அமைதிகாலத்தில்
வாமன்னாகத்
தெரியும்

ஆபத்து காலத்தில்
விசுவரூபம் எடுக்கும்
காப்பாற்ற.

பட்டது போதும்.
முகவர் கேட்டால்தான்
என்றில்லாமல்,
முகவரை கேளுங்கள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள்
திறக்கப்படும்.

காப்பீடுக்கு
ஈடில்லை.

வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.