Sunday 14 June 2015

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா!"? நண்பேண்டா

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா!"?இது உண்மை நிகழ்வு .ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார்.ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார். அவர் அப்போதுதான் கவனிச்சாறு. வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறதுன்னு.அவருக்கு ஆச்சரியமா இருந்தது. ''அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும்'' னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டுஉட்கார்ந்து இருந்தாரு.கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டாரு. அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு.ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா,உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலகட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊனமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா''ன்னு சிந்தனை வர இதை உலகம் பூரா பரப்ப ஆரம்பிச்சிட்டாராம். . . !( இது உண்மையாக நடந்தா என்று ஆராயாமல் நல்ல விஷயத்தை, கருத்தை , நாமும் முடிந்த அளவு பரப்புவோம், புரிபவர்கள் புரியட்டும்,]

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.