
Sunday, 10 January 2016
Saturday, 9 January 2016
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!
சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொண்டு படிக்கவும்...
சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்
இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான்
சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5
லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம்
கேட்டான்.
அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன
அவசரம்?” என்றார்.
இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில்
வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60
லட்சம் தேவைப்படும். தினம் தினம்
விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.
யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால்
நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க
வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க
ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம்
கேட்டால் எப்படி? என்றார்.
நமது விவாசய நிலத்தில்
ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய
கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன் ”5
லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க,
மகன்,
அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்
கடனை மாதத் தவனை முறையில் 20
வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.
வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300
வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல
வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்
அவன். அவர் முகம் மாறியது.
ஆனால் மகன்
ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று,
வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய
பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள்
என்றான்.
அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேந்தார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல
இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர்,
இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.
உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்
பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட
நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்
”இது எல்லாம்
உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான்.
என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம்
வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில்
பணம் வேண்டும். பேசாம தூங்குங்க!
வந்தது அசதியா இருக்கும்” என்றான்.
மனம்
கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும்
அன்று உறங்கிவிட்டார்.
மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார்.
மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட
வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.
அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்
பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.
பக்கத்தில்
வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.
ஆமாம் என்றார்.
”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார்
டி சாப்பிடலாம்” என்றான்.
சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும்
ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின்
கதவு அடைத்திருக்கு?”
அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும்
நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட்
வரைக்கும். பல வீட்ல கணவன்
மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க.
அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல
வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த
புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்
போவார்கள்!”
”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க
வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”
”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா?
அதனால ஒன்னு அவங்க சொந்த
ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க
அவங்களை முதியோர் இல்லத்தில
சேர்த்து விட்டுருவாங்க!”
இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர்
நின்று கொண்டு இருக்க அவன்
தொடர்ந்து சொன்னான், “
இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர்
தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.
திகைத்துப் போனார்
பெரியவர்.
தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம்
பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள்
மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.
”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”
“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணலாம்னு!”
”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”
”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12
மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப்
பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான்
வேலைக்கு போயிருவேன். அவ
வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல
விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”
”அப்போ நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கவே மாட்டிங்களா?”
”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம்
அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10
மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா.
அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
எதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”
”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”
”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”
அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்
அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு.
இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.
அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில்
அறைந்தது போல இருந்தது.
அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.
”என்ன
அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:
”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம்
என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.
இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும்
சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.
கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால்
உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.
விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன்
படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன்
வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!
மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன்
கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார்
அவர்.
அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.
எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!
Wednesday, 6 January 2016
ஓர் அழகான கதை
ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-
______________________________________
கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.
பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .
ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .
கடலை எப்படி வற்றவைப்பது?
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.
இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.
இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.
அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.
மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.
உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.
உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.
நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.
முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .
அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அன்பு நண்பர்களே .
எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.
எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மனைவி அமைவதெல்லாம்!!
எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.
''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.
கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து
விடுகிறது.
அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
மகிழ்ச்சியாக இருப்போம்..
Tuesday, 5 January 2016
யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் "
" யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் " . ✔ ✔ ✔
" யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறவங்க ? ✔
" ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔
" அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔
" கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔
" கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔
" அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . ✔
" காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. ✔
" உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . ✔
" அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . ✔
" என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . ✔
" மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . ✔
" ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . ✔
" இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. ✔
" எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . ✔
" இதுதான் நமது பிரச்சினையும் ...✔
" நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . ✔
" நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை . ✔
" அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை . ✔
" இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது . ✔
" ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை . ✔
" உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் . ✔
"உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது✔
"இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில். ✔. அன்புடன்....







