- என்.கணேசன்
நன்றி: விகடன்
ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும்போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தைநிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளைஉபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி.
இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto)என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80%சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் கணக்கிட்டார். 1930-40 களில் அமெரிக்கமேனேஜ்மெண்ட் நிபுணர் டாக்டர் ஜோசப் ஜூரன் (Dr.Joseph Juran) அதே விதி எல்லாவிஷயங்களுக்கும் பொருந்தும் என்று கூறி வந்தார். எல்லாவற்றிலும் பெரும்பாலானவிளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்றுகூறிய அந்த விதி பின்னர்பலராலும் பரெடொ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட ஆரம்பித்தது.
இந்த விதியை மையமாக வைத்து ரிச்சர்ட் கொச் (Richard Koch) என்பவர் 1998ல் "80/20 விதி -குறைந்ததைக் கொண்டு நிறைய அடையும் ரகசியம்" என்ற ஒரு நூலை எழுதி அதுமிகப்பிரபலமடைந்தது. இதில் எண்பதும், இருபதும் அதிகத்தையும், குறைவையும் குறிக்கும்குறியீடுகளே தவிர துல்லியமான சதவீதத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒரு வியாபாரி தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவானஎண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதைஎளிதாகக் கூற முடியும். ஒருமனிதன் தனக்கு அதிகமான (80%) திருப்தியைத் தரும் செயல்கள் ஒருசில (20%) தான் என்பதைக்காண முடியும். தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக்கணக்கிட முடியும். இப்படி எல்லா விஷயங்களிலும்இந்த விதி பெரும்பாலும் பொருந்துவதாகவேஇருக்கிறது.
இந்த விதியை நினைவுவைத்து புத்திசாலித்தனமாகச் செயல்படும் மனிதன் அதிக சிரமமில்லாமல்நிறைய சாதிக்க முடியும். வியாபாரத்தில் ஒருவன் முக்கியமான 20% பெரிய வாடிக்கையாளர்களைமிகத் திருப்திகரமாக வைத்துக் கொண்டால் 80% லாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இப்படிவாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக பலனைத் தருவனவற்றை அறிந்து வைத்திருந்துஅவற்றை சிறப்பாக செயல்படுத்த முடிபவன் அந்தந்த விஷயங்களில் பெரும் வெற்றியையும்,திருப்தியையும் காணலாம்.
மிகவும் ப்ராக்டிகலாகவும், எளிமையாகவும் தெரிகின்ற இந்த உண்மையை பெரும்பாலானோர்உணரத் தவறிவிடுகிறார்கள். முக்கியமானது, முக்கியமில்லாதது, அதிக பலன் தருவது,குறைவான பலன் தருவது என்று பகுத்தறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அல்லதுஎல்லாவற்றையும் ஒரே போல செயல்படுத்துகிறார்கள்.பின் 'நான் எவ்வளவு செய்தாலும் எனக்குஅதிக பலனே கிடைப்பதில்லை' என்று புலம்பும் மனிதர்களாகி விடுகிறார்கள்.
முதலில் எது முக்கியம் என்பதில் ஓவ்வொருவரும் தெளிவாக இருத்தல் நல்லது. எது எவ்வளவுபலன் தரும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும்எல்லாவற்றையும் முழுமையாக சிறப்பாகச்செய்து முடித்தல் சாத்தியம் இல்லை. நேரமும்,சூழ்நிலைகளும் பல சமயங்களில் பாதகமாக இருக்கும் போது அவன் பலவற்றைச் செய்யமுடியாமல் போகிறது. அப்படிச் செய்ய முடியாமல் போகும் செயல்கள் 80% பலன் தரும்விஷயங்களாக இருந்து விடாமல் அவன் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
அதே போல் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு மற்ற விஷயங்களுக்குக் காட்டும்அக்கறையையும், உற்சாகத்தையும் விட அதிக அக்கறையும், உற்சாகமும் காட்டுதல் பலன்களின்அளவையும், தரத்தையும் அதிகரிக்கும். பலர் பலன் குறைவாகத் தரும் அதிக விஷயங்களில்முதலிலேயே முழு சக்தியையும் விரயமாக்கி விட்டு பின்னர் அதிக பலன் தரும் விஷயங்களுக்குவரும் போது சோர்ந்து விடுகிறார்கள். அதிக வெற்றிகளை அடைய விரும்புபவர்கள் அப்படிமுன்யோசனையில்லாதவர்களாக இருந்துவிடக்கூடாது.
முடிந்தால் 80% பலன்களைத் தரும் செயல்களை ஓவ்வொரு நாளும் முதலில் செய்வது நல்லது.முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செயலாகப் புரிவது நல்லது. அது நடைமுறைக்குஒத்து வரா விட்டால், பிற்பாடே கூட அந்த முக்கிய செயல்களுக்கு அதிக நேரம், அதிக கவனம்,அதிக உற்சாகம் தந்து செயல்படுவது நல்ல விளைவுகளைத் தரும்.
இந்த 80/20 விதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திவருகிறீர்களா? இல்லையென்றால் அதை உணர்ந்து செயல்படுத்த ஆரம்பிக்க இன்றே, இதுவேநல்ல முகூர்த்தம்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.