Sunday, 8 June 2014

OUR BRANCH AGM

LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF INDIA
(President;HM.JAIN) Regd.No: 2924/2000.
Singanallur Branch,Coimbatore-18
Website: www.liafi76.blogspot.in, www.facebook.com/liafi singanallur branch
email; liafi76@gmail.com WhatsApp Numper 94425-09474

பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்
அன்புடையீர், வணக்கம்.
நமது சிங்காநல்லூர் கிளை LIC முகவர்கள் சங்கத்தின் (LIAFI) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் , மற்றும் புதிய செயலாளர் தேர்வு செய்வதற்காக வருகின்ற 24/06/2014 செவ்வாய்கிழமை அன்று சரியாக காலை 10 மணிமுதல் 1.30 மணிவரை கீதாஹால் ரோடு,ரயில்நிலையம் அருகில் உள்ள PARK INN ஹோட்டலில் பொதுக்குழு கூட்டம்  நடைபெறஉள்ளது. 
சிறப்பு பேச்சாளர்;
திரு.மனோசக்தி மாசிலாமணி அவர்கள்,
தலைவர், இந்திய மனோசக்தி பயிற்சி மையம், கோவை.
தலைப்பு:
மனமே! விழித்திடு! வீறுகொண்டு எழுந்திடு!!
இந்த விழாவில் நமது கோவை கோட்டதலைவர்களும்,நகரகிளைப் பொறுப்பாளர்களும்,LIC SENIOR BRANCH MANAGER,BRANCH MANAGER-SSO,ABM, மற்றும் பலர் கலந்துகொண்டு  சிறப்பிக்க உள்ளார்கள் 
எனவே,அனைத்து முகவ நண்பர்களும் தவறாமல் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
                               இப்படிக்கு

D.செல்வன்               S.ராம்குமார்             S.சண்முகசுந்தரம்
   தலைவர்                    செயலாளர்                    பொருளாளர்


WITH ALL INDIA PRESIDENT MR.JM.JAIN



80/20 விதி



என்.கணேசன்

நன்றி: விகடன்

ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானிஏனென்றால் ஆராயும்போதே வாழ்க்கை ஆழமாகின்றதுசரியையும்தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தைநிர்ணயிப்பது சாத்தியமாகிறதுஅப்படி ஆராயவும்ஆராய்ந்தறிந்த உண்மைகளைஉபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி.
இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto)என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார்தன் நாட்டின் 80%சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் கணக்கிட்டார்1930-40 களில் அமெரிக்கமேனேஜ்மெண்ட் நிபுணர் டாக்டர் ஜோசப் ஜூரன் (Dr.Joseph Juran) அதே விதி எல்லாவிஷயங்களுக்கும் பொருந்தும் என்று கூறி வந்தார்எல்லாவற்றிலும் பெரும்பாலானவிளைவுகளை சிறுபாலான காரணங்களே ஏற்படுத்துகின்றன என்றுகூறிய அந்த விதி பின்னர்பலராலும் பரெடொ விதி அல்லது 80/20 விதி என்றழைக்கப்பட ஆரம்பித்தது.
இந்த விதியை மையமாக வைத்து ரிச்சர்ட் கொச் (Richard Koch) என்பவர் 1998ல் "80/20 விதி -குறைந்ததைக் கொண்டு நிறைய அடையும் ரகசியம்என்ற ஒரு நூலை எழுதி அதுமிகப்பிரபலமடைந்ததுஇதில் எண்பதும்இருபதும் அதிகத்தையும்குறைவையும் குறிக்கும்குறியீடுகளே தவிர துல்லியமான சதவீதத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒரு வியாபாரி தனக்கு பெரும்பாலான (80%) வியாபாரத்தை அளிப்பது குறைவானஎண்ணிக்கையுடைய (20%) பெரிய வாடிக்கையாளர்களே என்பதைஎளிதாகக் கூற முடியும்ஒருமனிதன் தனக்கு அதிகமான (80%) திருப்தியைத் தரும் செயல்கள் ஒருசில (20%) தான் என்பதைக்காண முடியும்தனக்கு 80% வருவாயைத் தருவது 20% முக்கிய செயல்பாடுகளே என்பதைக்கணக்கிட முடியும்இப்படி எல்லா விஷயங்களிலும்இந்த விதி பெரும்பாலும் பொருந்துவதாகவேஇருக்கிறது.
இந்த விதியை நினைவுவைத்து புத்திசாலித்தனமாகச் செயல்படும் மனிதன் அதிக சிரமமில்லாமல்நிறைய சாதிக்க முடியும்வியாபாரத்தில் ஒருவன் முக்கியமான 20% பெரிய வாடிக்கையாளர்களைமிகத் திருப்திகரமாக வைத்துக் கொண்டால் 80% லாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.இப்படிவாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக பலனைத் தருவனவற்றை அறிந்து வைத்திருந்துஅவற்றை சிறப்பாக செயல்படுத்த முடிபவன் அந்தந்த விஷயங்களில் பெரும் வெற்றியையும்,திருப்தியையும் காணலாம்.
மிகவும் ப்ராக்டிகலாகவும்எளிமையாகவும் தெரிகின்ற இந்த உண்மையை பெரும்பாலானோர்உணரத் தவறிவிடுகிறார்கள்முக்கியமானதுமுக்கியமில்லாததுஅதிக பலன் தருவது,குறைவான பலன் தருவது என்று பகுத்தறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக அல்லதுஎல்லாவற்றையும் ஒரே போல செயல்படுத்துகிறார்கள்.பின் 'நான் எவ்வளவு செய்தாலும் எனக்குஅதிக பலனே கிடைப்பதில்லைஎன்று புலம்பும் மனிதர்களாகி விடுகிறார்கள்.
முதலில் எது முக்கியம் என்பதில் ஓவ்வொருவரும் தெளிவாக இருத்தல் நல்லதுஎது எவ்வளவுபலன் தரும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்ஒவ்வொரு மனிதனுக்கும்எல்லாவற்றையும் முழுமையாக சிறப்பாகச்செய்து முடித்தல் சாத்தியம் இல்லைநேரமும்,சூழ்நிலைகளும் பல சமயங்களில் பாதகமாக இருக்கும் போது அவன் பலவற்றைச் செய்யமுடியாமல் போகிறதுஅப்படிச் செய்ய முடியாமல் போகும் செயல்கள் 80% பலன் தரும்விஷயங்களாக இருந்து விடாமல் அவன் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
அதே போல் அதிக பலன் தரும் விஷயங்களுக்கு மற்ற விஷயங்களுக்குக் காட்டும்அக்கறையையும்உற்சாகத்தையும் விட அதிக அக்கறையும்உற்சாகமும் காட்டுதல் பலன்களின்அளவையும்தரத்தையும் அதிகரிக்கும்பலர் பலன் குறைவாகத் தரும் அதிக விஷயங்களில்முதலிலேயே முழு சக்தியையும் விரயமாக்கி விட்டு பின்னர் அதிக பலன் தரும் விஷயங்களுக்குவரும் போது சோர்ந்து விடுகிறார்கள்அதிக வெற்றிகளை அடைய விரும்புபவர்கள் அப்படிமுன்யோசனையில்லாதவர்களாக இருந்துவிடக்கூடாது.
முடிந்தால் 80% பலன்களைத் தரும் செயல்களை ஓவ்வொரு நாளும் முதலில் செய்வது நல்லது.முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செயலாகப் புரிவது நல்லதுஅது நடைமுறைக்குஒத்து வரா விட்டால்பிற்பாடே கூட அந்த முக்கிய செயல்களுக்கு அதிக நேரம்அதிக கவனம்,அதிக உற்சாகம் தந்து செயல்படுவது நல்ல விளைவுகளைத் தரும்.
இந்த 80/20 விதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களாஉங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திவருகிறீர்களாஇல்லையென்றால் அதை உணர்ந்து செயல்படுத்த ஆரம்பிக்க இன்றேஇதுவேநல்ல முகூர்த்தம்.
என்.கணேசன்
நன்றிவிகடன்