ஆயுள் காப்பீட்டின் அளவை கணக்கிட ஒரு ஃபார்முலா!!
பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆயுள் காப்பீடு என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பதை உணர மறுக்கிறார்கள். எனவே பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீட்டை வாங்கும் பொழுது முதலீடு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரும்பப் பெறும் சாத்தியங்களை ஆராய்ந்து அத்தகைய காப்பீட்டுத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆயுள் காப்பீட்டின் முக்கியமான நோக்கம், எதிர்பாராத சந்தர்பங்களில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வலிமையை அளிப்பது மட்டுமே. அதாவது உங்கள் குடுபத்திற்கு ஏற்படும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து உரிய பாதுகாப்பை வழங்கி பாலிசிதாரர்களூக்கு உதவுவது ஆயுள் காப்பீடு மட்டுமே. ஆயுள் காப்பீட்டை எடுப்பதை விட சரியான அளவிற்கு காப்பீடு எடுப்பது என்பது மிக முக்கியமானது.
முதலில், நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உங்களைச் சார்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால மட்டுமே ஆயுள் காப்பீடு உங்களுக்கு பயன் தரும். இரண்டாவது மற்றும் மிக முக்கியமான கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது உங்களூக்கு எவ்வளவு காப்பீடு இருக்க வேண்டும்?. நீங்கள் காப்பீடு அளவை கணக்கிட உதவும் கட்டைவிரல் விதியைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது மாத வருமானத்தை போன்று 'x' மடங்கு என்பது அந்த விதி. ஆனால் உங்களூக்கு தேவைப்படும் காப்பீட்டின் சரியான அளவை கணக்கிட உதவும் அறிவியல் பூர்வமான வழிமுறைகள் உள்ளன.
அறிவியல்பூர்வமாக உங்களூக்கு தேவைப்படும் சரியான காப்பீட்டு அளவை கணக்கிட உதவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் அனைத்து வழிமுறைகளின் நோக்கங்களூம் ஒன்றுதான். அதாவது நீங்கள் இல்லாத நிலையில், உங்கள் மனைவி (அல்லது உங்களைச் சார்ந்தவர்) தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தரமான வாழ்க்கையை வாழ தேவைப்படும் பணத்தை உறுதி செய்வது. உங்கள் கணக்கீட்டை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 35 வயது நிரம்பிய திரு சாம்ராட், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அவரைச் சார்ந்து இருக்கிறார்கள். திரு சாம்ராட் குடும்பத்தின் வருடாந்திர செலவுகள் ரூ 6 லட்சம் ஆகும். இதில் திரு சாம்ராட்டினுடைய தனிப்பட்ட செலவுகளான ரூ 1 லட்சமும் அடங்கும். திரு சாம்ராட் தன்னுடைய குழந்தைகளினுடைய படிப்பு மற்றும் மகளின் திருமணத்திற்கு திட்டமிட வேண்டும். சாம்ராட் சமீபத்தில் ரூ 30 லட்சத்திற்கு ஒரு வீட்டு கடனை பெற்றுள்ளார். சாம்ராட்க்கு ரூ 50 லட்சத்திற்கு ஏற்கனவே ஒரு ஆயுள் காப்பீடு உள்ளது, ஆனால் அவருக்கு அந்த காப்பீடு அளவு என்பது பற்றாக்குறையானது எனத் தெரியும். ஆகவே அவருக்கு தேவைப்படும் காப்பீட்டு அளவு எவ்வுளவு என்பதை கணகிட வேண்டும்.
சாம்ராட்டினுடைய மனைவியின் தற்போதைய வயது - 28 ஆண்டுகள் அவருடைய மனைவியின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் - 80 ஆண்டுகள் சாம்ராட் இல்லாத நிலையில் அவருடைய மனைவியின் எதிர்பார்க்கப்படும் மீதி வாழ்நாள் எண்ணிக்கை - 52 ஆண்டுகள் சாம்ராட்டின் தனிப்பட்ட செலவுகளை தவிர்த்து தற்போதைய வீட்டு செலவுகள் - ரூ 5 லட்சம் வீட்டு செலவுகள் மீதான ஆண்டுப் பணவீக்கம் - 6% எதிர்பார்க்கப்படும் வட்டிவிகிதம் - 8% எதிர்காலத்திற்கான தேவைப்படும் வீட்டு செலவுகளின் தற்போதைய மதிப்பு (52 ஆண்டுகளுக்கு ) - ரூ 1.68 கோடி வீட்டு கடன் பொறுப்பு - ரூ 30 லட்சம் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகள் திருமணம் போன்ற முக்கிய இலக்குகளுக்கு தேவைப்படும் பணத்தின் தற்போதைய மதிப்பு - ரூ 55 லட்சம் மொத்த காப்பீடு தேவை ரூ 2.53 கோடி மேலே கூறிய இலக்குகளை அடைய ஒதுக்கப்பட்ட பணம் - ரூ 5 லட்சம் தற்போதுள்ள காப்பீடு மதிப்பு - ரூ 50 லட்சம் காப்பீடு பற்றாக்குறை - ரூ 1.98 கோடி கணக்கீடு தொடர்பான சில முக்கிய அம்சங்களாவன: இதில் ரூ 1.68 கோடி அளவு என்பது நீங்கள் உங்களுடைய பணத்தை சுமார் 8 சதவீத வட்டி தரும் முதலீடுகளில் போட்டிருந்தால் அதிலிருந்து வரும் வட்டியை வைத்தே உங்களுடைய வழக்கமான அடிப்படை செலவுகளை சாமாளிக்க உதவும் வகையில் கணக்கிடிப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகை சுமார் 6 சதவீத பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திரு சாம்ராட்டின் மனைவி சுமார் 80 வயது வரை வாழ போதுமானது. தற்பொழுது உள்ள கடன்கள் மற்றும் நோக்கங்களின் தற்போதைய மதிப்பு ஆகியவற்றை சேர்ப்பது மிக முக்கியமாகும். ஏனெனில் இந்தச் செலவுகள் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கு அப்பாற்பட்டது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், சேமிப்புகள், மற்றும் ஆயுள் காப்பீட்டை கணக்கிட்டு நமக்கு தேவைப்படும் காப்பீட்டின் அளவிலிருந்து கழித்து பற்றாக்குறையை கண்டு பிடிக்கவேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமான காப்பீடு என்பது நம்முடைய தற்போதைய நிதித் தேவைகளை பாதிக்கும். எனவே மேலே கண்ட கணக்குகளின் படி, திரு சாம்ராட்டிற்கு தேவைப்படும் காப்பீட்டு அளவு என்பது சுமார் 2.5 கோடி ஆகும். அதில் அவருடைய தற்போதைய முதலீடு, சேமிப்பு, மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவற்றை கழித்தால் வருவது அவருக்கு தேவைப்படும் சரியான ஆயுள் காப்பீட்டு அளவாகும். பொதுவாக காப்பீடு தேவை என்பது காலத்தை பொருத்து மாறும். ஏனெனில் காலம் செல்லச் செல்ல நம்முடைய முதலீடு மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். மேலும் நம்மைச் சார்ந்தவர்களின் வயதும் அதிகரிக்கத் தொடங்கும்.
ஆகவே காலம் செல்லச் செல்ல நம்முடைய காப்பீட்டு அளவு குறைக்கப்பட வேண்டும். எனவே நமக்கு தேவைப்படும் ஆயுள் காப்பீட்டை 2 அல்லது 3 பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு ஆயுள் காப்பீடுகள் வாங்குவது நமக்கு நன்மை பயக்கும். மேலும் பிற்காலத்தில் நமக்கு தேவைப்படாத காப்பீட்டை தொடரும் தொல்லையில் இருந்தும் இது காப்பாற்றும். இத்தகைய தேவைகளுக்கு டேர்ம் பாலிசிகளே மிகவும் சிறந்தது. ஏனெனில் அதன் குறைந்த பிரீமியம் உங்களுடைய நிதித் தேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.