Saturday, 24 October 2015

இந்து சொத்துரிமை சட்டம்

இந்து சொத்துரிமை சட்டம் -  சட்டமும், புதிய சட்டமும் அளிக்கும் சொத்து உரிமைகள் என்ன.?

இந்து வாரிசுகளின் சொத்துரிமை
இந்திய சுதந்திரத்துக்கு முன், பழைய இந்து சட்டமே இருந்தது. அதன்படி, ஒரு இந்து ஆண் ஒரு சொத்தை வாங்கினால், அவருக்கு ஒரு மகன் பிறந்தவுடன் அவனும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவான். அந்த மகனுக்கு ஒரு மகன் (அதாவது பேரன்) பிறந்துவிட்டால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அந்தப் பேரனுக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் ஒரு பங்குதாரர் ஆகிவிடுவான். அதாவது சொத்தை வாங்கியவர் உட்பட மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய நான்கு தலைமுறைகளும் அந்தச் சொத்தில் பங்குதாரர் ஆகிவிடுவர். இதுதான் பழைய இந்து சட்டத்தின் சிறப்பு. அதனால்தான், 'தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்குண்டு' என்ற பழமொழியும் வந்தது.

எப்போதுமே இந்த நான்கு தலைமுறையும் அடுத்தடுத்து தொடரும். இதைத்தான் கோபார்சனரி சொத்து என்பர் (Hindu Coparcenary property).பொதுவாக அதை பூர்வீகச் சொத்து என்று சொல்வோம். இந்த மாதிரியான ஆண்வழிச் சொத்துக்களை மட்டும்தான் பூர்வீகச் சொத்துக்கள் என்று அர்த்தத்தில் குறிப்பிடுவர். (பெண்வழிச் சொத்துக்களை அவ்வாறு குறிப்பிடுவதில்லை. அதாவது அம்மாவின் அப்பாவான, நம் தாத்தா வழியில் கிடைத்த சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் இல்லை.)

1956ல் புதுச்சட்டம்.!

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், 1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் (The Hindu Successi
on Act 1956) கொண்டுவரப்பட்டு பெருத்த மாற்றம் செய்யப்பட்டது. இது 17.6.1956 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 1956க்கு பின் ஒருவர் ஒரு சொத்தை வாங்கினால், அதில் அவரின் மகனுக்கோ, பேரனுக்கோ, கொள்ளுப்பேரனுக்கோ, பங்கு கிடையாது. அவனும், அவன் பிறந்தவுடன் பங்குதாரர் ஆகமுடியாது. அந்த சொத்தை வாங்கியவரின் தனிச் சொத்தாகவே (Separate property or self acquired property)கருதப்படும். அவ்வாறு சொத்தை வாங்கியவர் இறந்தபின்னர், அவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள், இவர்களுக்கு மட்டுமே அந்த சொத்தை சரிசமமாக வாரிசு என்ற முறையில் கிடைக்கும். இறந்தவரின் தகப்பனாருக்கு ஒரு பங்கும் கிடைக்காது. (ஒருசில தாசில்தார்கள், தவறுதலாக, இறந்தவருக்கு அவரின் தகப்பனாரும் ஒரு வாரிசு என்று வாரிசு சான்றிதழ் வழங்குகிறார்கள்; இது சட்டப்படி தவறு). இறந்தவரின் தாயார், மனைவி, மகன்கள், மகள்கள் என்று யாருமே இல்லை என்றால்தான், இறந்தவரின் தகப்பனார் ஒரே வாரிசாக வருவார். அவரும் இல்லையென்றால், இறந்தவரின் சகோதரர்கள், சகோதரிகள் (அப்போது உயிருடன் இருக்கும் சகோதர, சகோதரிகள் மட்டும்) வாரிசாக சொத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படியும் யாரும் இல்லை என்றால், அந்த இறந்த சகோதர, சகோதரிகளின் வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இப்படியாக முதல்வாரிசுகள், 2ம் வாரிசுகள் என்று பல வகையுண்டு.

முதல் வாரிசுகள்: (Class-I Heirs)

Mother, wife, son, daughter (any children of the pre-deceased son or daughter)

இரண்டாம் வாரிசுகள் (Class-II Heirs)

First - Father
If no father is alive- then Brothers, Sisters,
If no brothers or sisters are alive, then to their children.

புதுச்சட்டத்தில் பூர்வீகச் சொத்து
ஆனால் 17.6.1956க்கு முன் ஒரு இந்து, அவர் கிரயம் வாங்கிய சொத்தையோ, அல்லது அவரின் தகப்பனார், பாட்டனார் கிரயம் வாங்கிய சொத்தையோ, விட்டுவிட்டு இறந்திருந்தால் அது பூர்வீகச் சொத்தாகக் கருதப் பட்டு, பழைய இந்துச் சட்டப்படி சொத்தை ஆண்வாரிசுகள் பங்கிட்டுக் கொண்டு, இறந்தவருக்கு அதில் கிடைக்கும் பங்கில் அவரின் மகன்களும், மகள்களும், மனைவியும் ஒரு சிறு பங்கை அடைவார்கள். இந்த முறைப்படி மகள்களுக்கு ஒரு சிறு பங்கே கிடைத்தது. ஆண்களைப் போன்று பெண்களுக்கு சம பங்கு கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு 1989ல் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதன்படி திருமணம் ஆன பெண்கள் தவிர மற்ற பெண்களுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்க சட்டம் கொண்டுவந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம்

2005ல் மத்திய அரசு ஒரு பெரிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்து, அதன்படி திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாமல் இருந்தாலும், பெண்களுக்கும், ஆண்களைப் போன்றே சரிசம பங்கு உண்டு என்று கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே 20.12.2004க்கு முன்னர் பாகம் பிரித்துக் கொண்ட சொத்துக்கள் தவிர மற்ற பூர்வீகச் சொத்தில் பெண்களும் உரிமை கொண்டாடலாம்.

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
கபிலன் :
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~~~~~

13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

உயரம் உனது

தொழிலின் மகிமை

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.

குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.

“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.

“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.

“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.

“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.